தென்னிந்திய திருநங்கை & திருநம்பி குறும்பட போட்டி 2023
‘கருப்பொருள் : திருநங்கையர் / திருநம்பிகள்
குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்
- திருநங்கைகள் குறும்பட போட்டிக்கான பதிவுகள் அனைவருக்கும் பொதுவானது.
- குறும்படம் திருநங்கை & திருநம்பிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
- குறும்படம் குறிப்பிட்டுள்ள 4 மொழிகளில் மட்டுமே இருக்க வேண்டும்.(தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு).
- குறும்படத்தின் காலஅளவு, தொடக்கம் முதல் நிறைவு உட்பட, குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
- குறும்படங்கள் 2022 ஜனவரி முதல் மார்ச் 2023 வரையான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.சுய சான்று மின்னஞ்சலில் இணைக்கப்பட வேண்டும்.
- குறும்படத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து உள்ளடக்கமும் சொந்தமாக அல்லது உரிமம் பெற்றதாக இருக்க வேண்டும். திரைப்படத்தில் காப்புரிமை பெற்ற பொருள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டிருந்தால், பங்கேற்பாளரிடம் அனுமதி பெற்று விழா ஏற்பாட்டாளர்களுக்கு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
- குறும்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 1 செப்டம்பர் 2023
- வடிவம் : குறும்படங்கள்Google Drive or Vimeo– ல் பதிவேற்றப்பட வேண்டும் (திறந்த அல்லது கடவுச் சொல் பாதுகாக்கப்பட்டவை) மற்றும் விழா அமைப்பாளர்களுக்கு பதிவிறக்கம் செய்ய ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.
- YouTube இணைப்புகள் ஏற்கப்படமாட்டாது.
- ஒரு படத்திற்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 50௦/-
- ஒரு நபர் ஒரு குறும்படம் மட்டுமே சமர்பிக்க வேண்டும்.
- போட்டிக்கு வரும் குறும்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் உரிமை விழா ஏற்பாட்டாளர்களுக்கு உண்டு. ஆன்லைன் மற்றும் நேரடி நகலெடுத்து பயன்படுத்துவதற்கான உரிமையை திருநங்கையர் & திருநம்பி ஆவண மையம் கொண்டுள்ளது.
- இறுதித் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம், விழா முடியும் வரை எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது.
- நீதிபதிகளின் முடிவுவே இறுதியானது.
- இந்த போட்டியின் எந்தவொரு விதியையும் அல்லது அதன் பகுதியையும் அல்லது நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் மாற்றுவதற்கான உரிமையை விழா அமைப்பாளர்கள் கொண்டுள்ளனர்.